பூஸா சிறைச்சாலை கைதி தண்ணீர் தாங்கி மீது ஏறி உண்ணாவிரதம்!

136 0

பூஸா சிறைச்சாலையில் கைதி ஒருவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

திங்கட்கிழமை (03) முதல் அவர் சிறைச்சாலையின் தண்ணீர் தாங்கி மீது ஏறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

காலி  சிறைச்சாலையில் இருந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

குறித்த கைதி பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.