உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் காரணமாக வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்திற்கோ அல்லது வாடிக்கையாளர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என அகில இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மக்கள் அச்சமடையத்தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு கடன் என்பது வங்கிகளுக்கும் நிறுவனங்களுக்கும் அரசாங்கம் வழங்கிய கடன் இவைகள் பிணைமுறிகள் போன்றவைகள்,என தெரிவித்துள்ள அவர் இந்த செயல்பாட்டை கையாள்வதற்கான நடைமுறைகள் வங்கிகளிடம் உள்ளன இதன் காரணமாக வங்கியில் வைப்பிலிடப்பட்ட பணத்திற்கும் வைப்பிலிட்டவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
வங்கிகளில் வைப்பிலிட்டவர்கள் வங்கி அமைப்பு முறைமீது நம்பிக்கை இழக்கவேண்டிய அவசியமில்லை இதனால் வங்கி அமைப்பு முறைக்கும் பாதிப்பு ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

