கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தின் ஊடாக இறுதி தீர்மானம் எடுக்கும் நோக்கில் பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை கூடவுள்ளது.
பாராளுமன்ற அமர்வு தொடர்பில் சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன செவ்வாய்க்கிழமை (27) மாலை வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.
வர்த்தமானி அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பிரதமரின் பிரதமரின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் 16 ஆவது பிரிவுக்கு அமைய 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி (சனிக்கிழமை) காலை 09.30 மணிக்கு பாராளுமன்ற கூட்டத்தொடர் தன்னால் ஆரம்பித்து வைக்கப்படும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான விவாதம் எதிர்வரும் சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
முழு நாள் விவாதத்தை தொடர்ந்து அன்றைய தினம் வாக்கெடுப்பு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் வெள்ளிக்கிழமை (30)இடம்பெறவுள்ளது.
தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த வாய்ப்பு உள்ளது என பாராளுமன்ற தகவல்கள் ஊடாக அறிய முடிகிறது.

