ஸ்ரீலங்கா எயாலைன்ஸ் சேவைக்கு சொந்தமான விமானத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தென் கொரியாவில் தொழில் நிமித்தம் புறப்பட்டு செல்வதற்கு முடியாமல்போன தொழிலாளர்கள் குழுவினர் தென்கொரியாவை நோக்கி புறப்பட்டுச்சென்றுள்ளனர்.
கடந்த 20ஆம் திகதி 52 தொழிலாளர்களுடன் தென்கொரியாவை நோக்கி புறப்பட்டுச் செல்ல தயாராகி இருந்த விமானத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தாங்கள் எதிர்பார்த்திருந்த பிரகாரம் குறித்த தினத்தில் தென்கொரியாவை நோக்கு செல்ல முடியாமல் போனது. இதன் காரணமாக அவர்களுக்கு உரித்தாகி இருந்த தொழில் வாய்ப்புகளும் இல்லாமல் போகும் அபாயம் இருந்தது.
இது தொடர்பாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேரடியக தலையிட்டு, விரைவாக அவர்களின் தொழிலை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு ஆலாேசனை வழங்கி இருந்தார்.
அதன் பிரகாரம் செயற்பட்ட பணியக அதிகாரிகள் தென் கொரியாவின் மனிதவள திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி குறித்த தொழிலாளர்களை விரைவாக தென்கொரியாவுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தனர். அதன் பெறுபேறாக நேற்று முன்தினம் குறித்த தொழிலாளர்கள் ஸ்ரீலங்கன் எயாலைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 470 என்ற விமானம் ஊடாக தென்கொரியாவை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.
இதற்கு மேலதிகமாக தென்கொரியாவின் கடற்றொழில் துறையில் தொழில் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற 52பேரைக்கொண்ட குழுவும் நேற்று முன்தினம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தெள்கொரியாவை நோக்கி புறப்பட்டுச்சென்றதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

