கூண்டிற்குள் அடைக்கப்பட்ட யானையை கிரேன் மூலம் தூக்குவதற்கான பயிற்சிகள்

66 0
image
இலங்கையில் நோய்வாய்ப்பட்டுள்ள சக்சுரின் யானையை இன்னமும் ஒருவார காலப்பகுதிக்குள் தாய்லாந்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் கூண்டினில் பயணிப்பதற்காக சக்சுரினை பழக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெறுகின்றன யானை தாய்லாந்தை சேர்ந்த பாகன்களுடன் நல்லவிதத்தில் நடந்துகொள்கின்றது என தாய்லாந்தின் தேசிய பூங்காக்கள் வனவிலங்கு தாவர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளா நாயகம் தெரிவித்துள்ளார்.

இரவில் கூண்டிற்குள் செல்வதற்கும் வெளியே வருவதற்கும் கூண்டின் கதவுகள் மூடப்பட்ட நிலையில் காலின் கதவுகள் பிணைக்கப்பட்டு  இரண்டுமணித்தியாலங்கள் உள்ளே நிற்பதற்கும் முத்துராஜவிற்கு  பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டமாக யானை உள்ளே இருக்கும்போது கூண்டை மூடி அதனை கிரேனை பயன்படுத்தி தூக்கும் பயிற்சி இடம்பெறும் என தெரிவித்துள்ள அவர் இந்த பயிற்சியை அதிகாரிகள் மிகவும் அவதானமாக முன்னெடுக்கவேண்டும் இந்த பயிற்சி இரண்டாம் திகதி யானை தாய்லாந்திற்கு கொண்டுசெல்லப்படும் வரை இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

முதலாம் திகதி முத்துராஜவை தெகிவளை மிருகக்காட்சி சாலையிலிருந்து  கொழும்பு விமானநிலையத்திற்கு கொண்டு செல்வார்கள் மறுநாள் காலை 7.30 மணிக்கு தாய்லாந்திலிருந்து விமானம் கொழும்பை வந்தடையும்

பாதுகாப்பை கருத்தில்கொண்டு ஜூலை 2ம் திகதி தாய்லாந்தின் சியாங்மாய் விமானநிலையத்தில் யானைப்பாகன்களும் மிருகவைத்தியர்களும் காத்திருப்பார்கள் அவர்கள் யானையின் நிலையை ஆராய்வார்கள்.

யானை நல்லநிலையில் காணப்பட்டால் அதனை நேரடியாக அன்றைய தினமே லம்பாங்கில் உள்ள பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டுசெல்வார்கள் ஆறுமணித்தியால விமானநிலையம் அதனை அழுத்தத்திற்கு உள்ளாக்கியிருந்தால் ஓய்விற்காக சியாங் மாய் சபாரிக்கு அனுப்புவார்கள்