அமைச்சர் பதவி விலக வேண்டும்

58 0

தொல்பொருளுக்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்கரம நாயக்க பணிப்பாளரை தவறான பாதையில் நடத்தியவர் அத்தோடு தொல்பொருள் செயலணியில் பின் இருந்து நிதி வழங்கி இராணுவ தளபதிகளை செயற்பட்ட மூல காரணமானவர். அமைச்சர் விதுர விக்கரம நாயக்கா.

அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து விலக்கவேண்டும். என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டு. ஊடக மையத்தில் இன்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்கள் என்ற பெயரிலே நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர்.

காலையில் கிரான், மாலையில் பட்டிப்பளை பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இந்த கூட்டங்களில் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ளவில்லை. அபிவிருத்தி என்ற பெயரிலே கடந்த 3 வருடங்களாக இந்த மாவட்டத்திலே எந்தொரு வேலைத் திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை.

நடை பெறுகின்ற கூட்டங்களில் அதிகாரிகளை அச்சுறுத்துவதும் தங்களது நிகழ்ச்சி நிரலுக்குள் வராத அதிகாரிகளை மோசமான வார்த்தைகளால் பேசுவது தான் மாவட்டத்தில் சில வருடங்களாக நடக்கின்றது.

அதே வேளை பேசப்படும் ஒரே விடையத்தை மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருக்கின்றோம். எதிர்கால தீர்வுவை பாராளுமன்ற உறுப்பினரான நான் முன் வைத்தாலும் இதனை நடை முறைப்படுத்துவதற்கு எங்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.

இருந்த போதும் கல்வி தொடர்பாக ஆசிரியர் பற்றாக்குறை சில வலையங்களில் அதிகமான ஆசிரியர் இருக்கின்றமை சில வலயங்களில் இல்லை போன்ற பிரச்சனைகள் இருக்கின்றது.

இவ்வாறு மாவட்டத்தில் அரசாங்கத்தின் கொள்கைகளை நடை முறைப் படுத்துவதற்காக இருக்கும் பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர்கள் இவ்வாறான விடயங்கள் பற்றி எந்த அக்கறையும் செலுத்தாமல் தீர்வை வழங்க வேண்டியவர்கள். கூட்டத்தில் அமைதியாக இருந்து கொண்டு அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டு அமைச்சு பதவிகள் பெற்று, சலுகைகளை மட்டும் அனுபவித்துக் கொண்டு தீர்வுகளை காண்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் முன் வைக்க வேண்டியுள்ளது.

நாங்கள் இந்த கூட்டங்களுக்கு போகாவிட்டால் இந்த மாவட்டத்தின் அனைத்து வளங்களையும் சூறையாடி பாலைவனமாக மாறியிருக்கும் எனவே பாதுகாவலராக கூட்டத்திற்கு செல்ல வேண்டியள்ளது.

திகிலிவெட்டை ஆலயத்துக்கான வீதியை கொண்டு வருவது தொடர்பாக பேசிய போதும் குறுகிய இலாபத்துக்காக அதற்கான ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. குறிப்பாக வன பரிபாலன அதிகாரிகள் அபிவிருத்தி குழு கூட்டத்தில் பங்கு கொள்வதில்லை.

ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தையில் காணி தொடர்பாக பேசி வருகின்றோம். அதில் வன பரிபாலன திணைக்கள 1985 ஆம் ஆண்டு வரை படத்திற்கு சென்றால் வட கிழக்கிலுள்ள வன பரிபாலன திணைக்களத்தின் கீழ் உள்ள காணி பிரச்சனைக்கு முடிவு வரும்.

அதே வேளை குடும்பிமலையில் தொல்பொருளால் கட்டிடம் கட்டுவதை நிறுத்துமாறு தெரிவித்த போதும் அவர் கூட்டத்திற்கு வருவதில்லை.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் கூட்டத்தில் தொல்பொருள் பணிப்பாளர் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்பொருளுக்காக ஒதுக்கிய காணியை விடுவிப்பதற்கு தான் பின் வாங்கி அனுப்ப முடியாது. என தெரிவித்த போது ஜனாதிபதி இராஜினாமா கடிதத்தை தருமாறு வாங்கியிருந்தார்.

எனவே இவை அனைத்துக்கும் பொறுப்பான அமைச்சர் விதுர விக்கரம நாயக்க பணிப்பாளரை தவறான பாதையில் நடாத்தியவரும் பணிப்பாளருக்கு ஆதரவாக செயற்பட்ட அமைச்சர் விதுர விக்கரம நாயக்கவை இந்த கூட்டத்துக்கு கேட்கும் கேள்வி, குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைப்பதற்கு இராணுவத்துடன் சேர்ந்து விதுர விக்கரம நாயக்கதான் முக்கியமாக செயற்பட்டவர். அவ்வாறு மட்டக்களப்பில் குசனார் மலைக்கு வந்தபோது பாரிய எதிர்ப்பு தெரிவித்து விரட்டியடித்தோம்.

எனவே ஜனாதிபதி ஏன் விக்கரம நாயக்கவை இது வரைக்கும் கண்டிக்கவில்லை உண்மையில் அமைச்சர் விக்கரம நாயக்கவை பதவில் இருந்து விலக்கவேண்டும்.

ஜனாதிபதி பணிப்பாளரை நீக்குவதற்கு காரணம் என்ன ஜனாதிபதி தேர்தலில் தனக்கு எங்களுடைய ஆதரவை பெற வேண்டும். என்பதற்காக எடுக்கும் சில முயற்சி அவர் உண்மையிலே தீர்மானம் எடுக்க வேண்டுமாயின் விதுர விக்கிரம நாயக்காவை பதவியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும்.

அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க செருப்பு போட மாட்டார் அதனால் ஒரு புண்ணியவானாக மாற முடியாது. சிவன் ஆலயத்தை உடைத்து விட்டு அதில் புத்தர் சிலையை வைத்து கும்பிட்டால் கடவுளுக்கே பொறுக்காத விடயங்கள் எனவே தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து கொண்டு அவர்களது காணியை பறிக்கும் ஒரு குற்றங்கள் அதாவது கடவுளுக்கே பொறுக்காத விடையம் எனவே இதனை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.