எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றில் மனு!

107 0

இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில், கடுமையான கையூட்டல் மற்றும் ஊழல்கள் நிறைந்துள்ளதாக தெரிவித்து, உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் உள்ளிட்ட மூன்று அமைப்புக்கள் இந்த மனுவை தாக்கல்செய்துள்ளன.

இந்த மனுவில், எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் பின்னர், முன்வைக்கப்படும் இழப்பீட்டு கோரிக்கையை மையப்படுத்தி, கையூட்டல் மற்றும் ஊழல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுக்களை மனுதாரர்கள் சுமத்தியுள்ளனர்.

இந்த மனுமீதான விசாரணை, நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.