யாழ்ப்பாணம், அச்சுவேலி தெற்கு விக்னேஸ்வரா பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்று இன்று (3) தீக்கிரையாகியுள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாண மாநகர சபை தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும், வர்த்தக நிலையம் தீயினால் பெருமளவில் சேதமடைந்துள்ளது.
இதனையடுத்து, இந்த வர்த்தக நிலையத்துக்கு சில விஷமிகள் தீ வைத்திருக்கலாம் என வர்த்தக நிலைய உரிமையாளர் சந்தேகம் தெரிவித்து, அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

