சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
அதற்கமைய, ஞாயிற்றுக்கிழமை (3) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 350 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

