440 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

156 0

பொசன் -போயா தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 440 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 34வது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறையிலுள்ள கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், 40 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, நேற்றுடன் 20 வருடங்கள் பூர்த்தியாகும் சிறைக்கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு சிறைச்சாலையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 434 ஆண் கைதிகள் மற்றும் 6 பெண் கைதிகள் உட்பட 440 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.