வீதியோரம் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் வாகனம் மோதி உயிரிழப்பு !

40 0

வீதியோரம் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அச்சுவேலி வல்லை பருத்தித்துறை பிரதான வீதியில், நேற்று காலை வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சீனியர் சந்திரகாந்தன் என்ற 56 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.

வேக கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளாகியதுடன் அங்கிருந்த இரண்டு மின்கம்பங்களையும் மோதி சேதப்படுத்தியது. விபத்தின் போது அருகில் இருந்த ஒருவரும் காயமடைந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.