கொழும்பு பல்கலையின் கலைப் பிரிவு கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

249 0

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் வருடத்திற்கான கலைப் பிரிவு மாணவர்களுக்கு, பல்கலைக்கழகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பிரிவு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக, அப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் லக்ஷ்மன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இரவு ​கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு மாணவக் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்தனர். இவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, விடுதியில் இருந்த கலைப் பிரிவு மாணவர்களை அங்கிருந்து வௌியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, உப வேந்தர் கூறியுள்ளார். இதேவேளை இந்த மோதலுக்கு காரணம் மாணவர்களுக்கான தேர்தல் எனத் தெரியவந்துள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், கலைப்பிரிவின் முதலாம் வருடம் மற்றும் ஏனைய பீட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் வழமைபோல் இடம்பெறும் என, அப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.