பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை

86 0
பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்பவும், பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளவும் அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கல்வியமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவரால் இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.நாட்டில் பாடசாலை கட்டமைப்பின் தற்போதைய நிலைமையை ஆராய்வதற்கான குறித்த கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட ஏனைய அனைத்து பணிக்குழாம் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.