முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளான வியாழக்கிழமை [18] தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அதன் தலைமை அலுவலகத்தின் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டது.

இறுதிப்போரில் புதுமாத்தளனில் தனது கணவரைப் பலி கொடுத்த திருமதி தக்ஸாயினி அருள்நேசயோகநாதன் அஞ்சலி சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தியதைத் தொடந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ .ஐங்கரநேசன் , பொதுச் செயலாளர் ம.கஜேந்திரன் , துணைப் பொதுச் செயலாளர் சண்.தயாளன் , பொருளாளர் க.கேதீஸ்வரநாதன் ஆகியோர் உட்படப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

ஏராளமானோர் முள்ளிவாய்க்கால் கஞ்சியை உணர்வுடன் அருந்திச் சென்றமையைக் காணமுடிந்தது.








