மன்னாரில் மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

216 0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை (18) உணர்வு பூர்வமாக தமிழ் பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னாரிலும் அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை காலை 8 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டதோடு நினைவேந்தல் நிகழ்வு  இடம்பெற்றது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மத தலைவர்கள் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.