வேலையில்லா பட்டதாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று ஏழாவது நாளாகவும் போராட்டத்தில்…(காணொளி)

250 0

திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரி கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று ஏழாவது நாளாகவும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை 11.00 மணி அளவில் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தினை முற்றுகையிட்ட பட்டதாரிகள் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ஆயிரத்து 500 ற்கும் மேற்பட்ட வேலையில்லா பட்டதாரிகள் உள்ளனர்.

தாங்கள் பட்டம் பெற்று ஐந்து வருடங்களாகியும் நியமனம் கிடைக்கவில்லை யெனவும் தமக்கு உடனடியாக நிரந்தர நியமனத்தை பெற்றுத்தருமாறும் வேலையில்லா ப்பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டம் பெற்றபட்ட தாரிகளுக்கு எதற்காக போட்டிப் பரீட்சை வைக்க வேண்டும் எனவும், அவ்வாறு போட்டிப் பரீட்சையின் அடைப்படையில் தெரிவு செய்யும் போது பலர் புறக்கணிக்கப்படுகின்றனர் எனவும் பட்டதாரிகள் தெரிவித்தனர்.

மேலும் தமக்கான தீர்வானது எழுத்து மூலம் கிடைக்கப் பெறும் வரை தாம் போராட்டத்தினை கைவிடப்போவதில்லை எனவும் பட்டதாரிகள் தெரிவித்தனர்.