மக்களின் மூட நம்பிக்கையால் ஆமையின் வயிற்றில் சேர்ந்த 5 கிலோ நாணையங்கள்

341 0

மக்களின் மூட நம்பிக்கையால் ஆமையின் வயிற்றில் சேர்ந்த 5 கிலோ நாணையங்கள்

பாங்காக்:

தாய்லாந்து நாட்டில் ஸ்ரீரச்சா பகுதியில் உள்ள ஒரு பூங்காவின் ஏரியில் வசிக்கும் 25-வயதான பெண் ஆமை ’ஒம்சின்’.  சில நாட்களுக்கு முன்னர் இந்த ஆமை, மற்றவற்றைப் போல எளிதில் நீந்த முடியாமல் கஷ்டப்பட்டிருக்கிறது. அப்போது இதனை சோதனை செய்து பார்த்ததில்தான் இதன் வயிற்றில் அதிக அளவிலான நாணயங்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று நடந்த அறுவைசிகிச்சையில் இந்த ஆமையின் வயிற்றில் இருந்து மட்டும் சுமார் 5 கிலோ அளவுக்கு நாணயங்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. இதன் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட மொத்த நாணயங்களின் எண்ணிக்கை மட்டும் 915. இந்த அளவு கணத்தை தன் வயிற்றில் சுமந்துகொண்டுதான் வாழ்ந்து வந்திருக்கிறது இந்த ஆமை.

அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுடைய நாட்கள் நன்றாக தொடங்க வேண்டும் என்பதற்காக அந்த ஏரியில் நாணையங்களை விட்டெறிவது வழக்கம். இந்த நாணையங்கள் தான் ஆமையின் உணவுகளோடு சேர்ந்து வயிற்றில் தங்கியுள்ளது.

சுமார் 7 மணி நேரம் இதற்கான அறுவைசிகிச்சை நடந்துள்ளது. தாய்லாந்து நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள், மீன்பிடி கொக்கிகள் உள்ளிட்ட பொருட்கள் மட்டும் சுமார் 5 கிலோ அளவுக்கு ஆமையின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.  தற்போது சிகிச்சைக்குப் பின் ஆமை நலமாக உள்ளதாகக் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.