அனைத்து கோயில்களுக்கும் விரைவில் அறங்காவலர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

85 0

இந்து தர்ம பரிஷத் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி, பெண், எஸ்சி பிரிவைச் சார்ந்தவர், சமூக ஆர்வலர், பக்தர் ஆகியோர் அடங்கிய அறங்காவலர்கள் குழு அமைக்க உத்தரவிடவேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, சஞ்சய் கரோல் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அறங்காவலர்களை நியமனம் செய்ய மாவட்டக் குழுஅமைத்து பிறப்பிக்கப்பட்ட ஆணைகள், கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்து பிறப்பிக்கப்பட்ட ஆணைகளின் நகல்கள் தமிழக அரசு தரப்பில்தாக்கல் செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து அறங்காவலர்களை நியமனம் செய்ய தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பாராட்டிய நீதிபதிகள், அனைத்து கோயில்களுக்கும் விரைவில் அறங்காவலர்களை நியமிக்கவேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தி வழக்கை ஆகஸ்ட் கடைசி வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.