மட்டக்குளி பிரதேசத்தில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

278 0

மட்டக்குளி பிரதேசத்தில் 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது இந்த ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.