இலங்கை கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு கடற்றொழிலாளர் கொல்லப்பட்டு மேலும் இருவர் காயமடைந்துள்ள சம்பவம் தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சரின் கவனம் திரும்பியுள்ளது.
இது தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக அறிக்கையொன்றை வௌியிட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதனூடாக சம்பவம் தொடர்பான உண்மைத் தகவல்கள் வௌிவரும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் , இது தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் தொலைப்பேசியில் கலந்துரையாடியதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் , இந்திய கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டை இலங்கை கடற்படையினர் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.