இலங்கையின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் – பிரேரணையின் வரைவு குறித்த கலந்துரையாடல் நாளை

263 0
இலங்கையின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் குறித்த விபரங்களை தொடர்ந்து மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கச் செய்யும் வகையிலான பிரேரணையின் வரைவு குறித்து நாளைய தினம் கலந்துரையாடப்படவுள்ளது.
குறித்த பிரேரணையில், ஏற்கனவே 2015ம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பான அரசாங்கத்தின் செயற்பாடுகள் வரவேற்கப்பட்டுள்ளன.
எனினும் அரசாங்கம் செயற்படுத்த வேண்டிய பல விடயங்கள் இன்னும் தொக்கு நிற்கின்றன.
இந்த விடயங்களை அமுலாக்கும் போது, அவற்றின் விபரங்களை தொடர்ச்சியாக மனித உரிமைகள் பேரவைக்கு அறியப்படுத்தும் வகையில் இந்த பிரேரணை உருவாக்கப்பட்டுள்ளது.
நாளைய கலந்துரையாடலின் போது இந்த பிரேரணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிளிநொச்சி – பன்னங்கண்டி கிராம மக்கள், தங்களுக்கான காணி உறுதியையும், நிரந்தர வீட்டுத்திட்டத்தையும் வழங்குமாறு வலியுறுத்தி போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.