காணாமல் போனோருக்கு நீதிகோரி பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 15ம் தினமாகவும் தொடர்ந்து இடம்பெறுகிறது.
வவுனியாவில் 11ம் தினமாக காணாமல் போனோரின் உறவினர்கள் சுழற்சியில் முறையில் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரம் திருகோணமலை – மூதூரில் காணாமல் போனோருக்கு நீதிகோரி இன்று முதல் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டமும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்று வருகின்றன.

