விமல் வீரவங்ச மீண்டும் விளக்கமறியலில்

408 0

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் அவரை ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான 40 வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பில் விமல் வீரவங்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட போது அவர் சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் முன்னிலையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.