ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு உரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் – பிரித்தானிய தொழிற்கட்சி கோரிக்கை

253 0

ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டின் போது இலங்கைக்கு உரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என பிரித்தானிய தொழிற்கட்சி கோரியுள்ளது.

பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் மொரிஸ் ஜோன்சனுக்கு தொழிற்கட்சியின் நிழல் வெளியுறவு செயலர் எலிலி தொன்பெரி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் 12வது குழு அறையில் கடந்த வாரம் இடம்பெற்ற தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் நடவடிக்கையாளர்களின் சந்திப்பை அடுத்தே அந்த கோரிக்கை கடிதம் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலை தொழிற்கட்சிக்கான தமிழர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

அத்துடன், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான வர்த்தக தடைகளை நீக்க கூடாது என்றும் தொழிற்கட்சி கேட்டுள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய ராச்சியத்தின் சிங்கள சம்மேளனத்தின் தலைவர் டக்ளஸ் விக்ரமரட்ண, இலங்கைக்கு ஆதரவு வழங்கும் வகையில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை வழிப்படுத்த வேண்டியது, பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் பொறுப்பு என குறிப்பிட்டுள்ளார்.