‘சைட்டம்’ தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு

343 0

‘சைட்டம்’ தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்க, வைத்திய பீட பீடாதிபதி, விரிவுரையாளர் சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்துள்ளார்.

நாளை மறுநாள் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அதன்போது  ‘சைட்டம்’ நிறுவனம் தொடர்பில் முக்கியமான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.