இலங்கை வரும் இந்திய கடற்படை கப்பல்!!

255 0

இந்திய கடற்படைக்கு சொந்தமான I.N.S.தர்ஷன் என்ற கப்பல் இலங்கையில் இரண்டு மாதங்கள் பயிற்சியில் ஈடுபடவுள்ளது.

இந்த கப்பல் தற்போது விசாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை நோக்கி புறப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை கப்பலில் இந்திய கடற்படையினர், இலங்கை கடற்பரப்பில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.

மேலும் தர்ஷன் என்ற இந்த கப்பல் கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களுக்கும் செல்லவுள்ளது.