ஜப்பானில் மீட்புப்பணி பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்து

251 0

மத்திய ஜப்பானில் மீட்புப்பணி பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் வடமேற்குப் பகுதியில் உள்ளது ஹசிபுஸ் மலை. பனியால் சூழ்ந்திருக்கும் இந்த மலையை சுற்றி அடர்ந்த காடு உள்ளது. இந்த மலைப்பகுதியில் மீட்புப்பணி பயிற்சியில் ஹெலிகாப்டர் ஒன்று ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 7 தீயணைப்புப்படை வீரர்கள், என்ஜீனியர் மற்றும் விமானி ஆகியோர் இருந்தனர்.

இந்த விமானம் இன்று மதியம் திடீரென விபத்திற்குள்ளானது. ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் தூக்கி்ச் செல்லப்பட்டனர். அதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு பேர் சுயநினைவு திரும்பாத நிலையில் உள்ளனர். மற்ற நான்குபேரை போலீசார் தேடிவருகின்றன.

பனி அடர்ந்து காணப்படுவதால் தேடுதல் வேட்டை நிறுத்தப்பட்டுள்ளது. நாளை காலை மீண்டும் தேடுதல் வேட்டை நடைபெறும் என நாகானோ போலீசார் தெரிவித்தனர்.