சமுதாயத்தைப் பாதுகாப்பதற்காகவே கட்சி தவிர தலைமைத்துவத்தைப் பாதுகாக்க அல்ல – ரிசாத்

337 0
சமுதாயத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு கட்சி தேவைப்படுகின்றதே தவிர தலைமைத்துவத்தைப் பாதுகாக்க ஒரு கட்சி தேவையில்லை என அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற விசேட செயலமர்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது றிசாட் பதியுதீன் இதனை தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் தவறான பாதையில் பயணித்ததனாலேயே கட்சிக்குள் இருந்து கொண்டே தாம் தலைமையைத் தட்டிக்கேட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கட்சித் தலைமையின் பிழைகளை சுட்டிக்காட்டியதன் வெளிப்பாடாகவே தாம் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சித் தலைமையின் பிழையான முடிவுகளை சுட்டிக்காட்டினால் துரோகிகளாக தூக்கி எறியும் சாபக்கேடு இன்னும் முஸ்லிம் காங்கிரஸில் தொடர்கிறது.
முஸ்லிம்களின் சமூகக்கட்சியென நம்பியிருந்த முஸ்லிம் காங்கிரஸ், சமூகத்துக்கான சரியான வழிகாட்டலில் இருந்து தவறியதானாலேயே தாங்கள் புதுக்கட்சி ஒன்றை ஆரம்பித்ததாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மேற்கொண்ட தவறான அரசியல் முடிவுகளே அப்பாவி முஸ்லிம்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் நலிவடைவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே எந்த பின்னடைவு ஏற்பட்டாலும் தாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து வெளியேறப்போவதில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.