தம்புள்ளை மருத்துவமனையில் புதிய பிறப்பு கட்டுப்பாட்டு முறை

243 0

சில நாட்களாக தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் பிரசவ சிகிச்சை அறையில் குழந்தை பிரசவித்த பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் தாய்மார்களுக்கு பலவந்தமாக பிறப்பு கட்டுப்பாட்டு கருவி உடலில் பொருத்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ள தாய்மார்கள் மற்றும் தந்தையரும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

குறித்த கருவியை பொருத்துவதற்கு மறுக்கும் தாய்மார்களை வீடுகளுக்கு செல்லவிடாமல் சிகிச்சை அறையில் குழந்தையுடன் தடுத்து வைப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக எமது செய்தி பிரிவு தம்புள்ளை ஆதார மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி சால்ஸ் நுகேவலவிடம் வினவிய போது, இது தொடர்பாக தனக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன்,உடனடியாக இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.