பல்பொருள் அங்காடியொன்றில் திருட முயன்றவரை அதன் ஊழியர்கள் மோசமாக தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வத்தளையில் உள்ள பல்பொருள் அங்காடியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
நபர் ஒருவரை ஊழியர்கள் சூழ்ந்து நின்று தாக்குவதை வீடியோ காண்பிக்கின்றது.
இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நிறுவனம் 19ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளது.
திருடமுயன்றவர் தப்பியோ முயன்றார் ஆனால் வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் அவர் தப்பியோடாமல் தடுத்தனர்.
அதன் பின்னர் பதற்றமான நிலை உருவானது என தெரிவித்துள்ள நிறுவனம் சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் வரும் வரை குற்றத்தில் ஈடுபட முயன்றவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்வதே உரிய நடைமுறை ஆனால் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை இதில் சம்மந்தப்பட்டவர்கள் விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

