பொதுஜன பெரமுனவின் தவிசாளராக உதுராவெல தம்மரதன தேரர் நியமனம்!

150 0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியிலிருந்து ஜி.எல்.பீரிஸ் நீக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் சபைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளராக உதுராவெல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 2023ஆம் ஆண்டுக்கான பொதுச்சபை கூட்டம் கட்சியின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் சனிக்கிழமை (22) காலை நெலும் மாவத்தையில் உள்ள தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.