பயணதடை குறித்த மற்றுமொரு பத்திரத்தில் ட்ரம்ப் நாளை கைச்சாத்து

339 0

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த சில தரப்பினர் அமெரிக்காவினுள் நுழைவது குறித்த தடை தொடர்பான சட்ட மூலம் ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாளை கைச்சாத்திடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை நிர்வாக அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த வாரம் இந்த ஆவணத்தில் அவர் கைச்சாத்திட இருந்த போதிலும், அமெரிக்க காங்கிரசின் செயல்பாடு காரணமாக பிற்போடப்பட்டது.

இதேவேளை, தடை செய்யப்பட்ட நாடுகள் பட்டியலில் இருந்து ஈராக் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை ராஜாங்க செயலர் ரெக்ஸ் ரிலசன், பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மற்றீஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்.ஆர். மக்மாஸ்டர் ஆகியோரினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஈராக்கிய மக்கள் அதிக அளவில் உதவியுள்ளனர் என்ற காரணத்திற்காகவே இந்த சலுகை ஈராக்கிற்கு வழங்க வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து வெள்ளை மாளிகை சட்டவல்லுனர்கள் மற்றும் ராஜதந்திரிகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரேரணைக்கு அமைய முஸ்லீம்கள் அதிக அளவில் வசிக்கும் ஏழு நாடுகளுக்கு இந்த தடை சட்டம் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.