இலங்கையில் வனவள அழிவு, கடந்த வருடத்தில் குறைவடைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன விலங்குகள் பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் அனுர சந்துருசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
உலக உணவு மற்றும் விவசாய அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் நாட்டின் வன வள அழிவானது நூற்றுக்கு தசம் 4 வீதமே குறைவடைந்துள்ளது.
அதுபோல் 2000ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு வரையிலான 10 ஆயண்டு காலப்பகுதியில் 58 ஆயிரத்து 791 ஹெக்டயர் வனப்பகுதி அழிவடைந்துள்ளன.
1990 தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சுமார் 4 ஆயிரத்து 380 ஹெக்டயர் வனப்பகுதி அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

