தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி ஒன்பதாவது நாளாக (04.03 .2017 ) நேற்றைய தினம் நடைபெற்ற ஈருருளிப் பயணம் Bözingenstrasse 26A 2502 Biel/Bienne Switzerland என்னும் இடத்தில் இருந்து ஏழு மனித நேய ஆவலர்களுடன் ஆரம்பமாகி Lausanne நகரை நோக்கி சென்றது. பயணம் மலைப்பிரதேசங்கள் ஊடாக சென்றதோடு கடும் மழைக்கும் குளிருக்கும் முகம்கொடுத்தவாறு உறுதியோடு பயணித்தது. நேற்றைய தினத்தில் அனைத்து ஈருருளிப் பயணத்தில் ஈடுபட்ட செயற்பாட்டாளர்களும் அடையாள உணர்வு தவிர்ப்பை மேற்கொண்டனர். நேற்றைய தினம் 7 பேர் கொண்ட ஈருருளிப் பயணமாக அமைந்ததோடு , ஆஸ்திரேலியா வில் இருந்தும் வருகை தந்திருந்த மனிதநேய செயற்பாட்டாளர் ஒருவரும் இப்பயணத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.இன்றைய தினம் நடைபெறும் பயணத்துக்கு இயற்கை நல் வழி காட்ட இயற்கையை வேண்டுகின்றோம். வெல்க தமிழீழம்.






