ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கையில் இலங்கை தொடர்பாக எப்படியான விடயங்கள் குறிப்பிடப்பட்டாலும், நியாயம் மற்றும் நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூஸைனின் இலங்கை தொடர்பான அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
சர்வதேச மனித உரிமைச் சட்ட மற்றும் மனிமாபிமானச் சட்ட மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கு, சர்வதேச நீதிபதிகள், சட்டவாளர்கள், வழக்குத்தொடுனர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்கிய, கலப்பு நீதிமன்றத்தை உருவாக்கும் சட்டத்தை இலங்கை கொண்டுவர வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வெளிவிகார பிரதி அமைச்சர் ஹரஷ டி சில்வா, இலங்கை அரசாங்கம் நல்லிணக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றும் அரசாங்கம் என்ற வகையில் இலங்கை அரசாங்கம் முகம்கொடுத்துவரும் பிரச்சினைகளை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

