கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் பொலிசாரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் ராஜபக்ச தெரிவித்தார்.நேற்று சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற அவர், அங்கு கூடியிருந்த மக்களுடனான சந்திப்பில் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் அடிக்கடி எம்முடன் தொடர்பு கொள்கின்றார். அவர் இப்பகுதியில் அதிக காலம் பணிபுரிந்தபர்.
அவர் இப்பிரச்சினை தொடர்பில் நடுநிலை விசாரணை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
எனவே பொலிசாரால் மேற்கொள்ளப்புடும் எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துளைப்பு வழங்குங்கள். சட்டத்தினை கையில் எடுப்பதற்கு யாருக்கும் முடியாது.
எனவே எமது விசாரணை நடு நிலையாக காணப்புடும். யாரும் பயப்பட வேண்டியதில்லை. பாதிக்கப்பட்டவரிற்கு நீதி பெற்று கொடுப்போம்.
உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டறிந்து நீதியின் முன் நிறுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் அதிகளவான பொலிசார் குவிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்ற வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்


