கடந்த மாதம் 20ஆம் திகதி காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆரம்பிக்கப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் நேற்று சனிக்கிழமைகிழமை பதின்முன்றாவது நாளாக தொடர்ந்தது.
யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி அவர்கள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கறுப்பு துணியால் கண்ணைக்கட்டியவாறு போராட்டம் மேற்கொண்டனர்.
எமது உறவுகளுக்கு இன்னம் பதிலளிக்காது இந்த அரசு பாரா முகமாக இருக்கின்றது என்பதனைக் காட்டுவதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கறுப்பு துணியால் கண்ணைக்கட்டியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுதுவதாகவும்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம் எனவும் இலங்கை அரசுக்கு பொறுப்புக் கூறல் விடயத்தில் ஜநா கால அவகாசம் வழங்க்க கூடாது என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
தங்களுக்கு உறுதியான தீர்வு கிடைக்கும் வரைக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தை தொடரப் போவதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்ட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


