அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப அரசாங்கத்தை நடத்த முடியாது – ஜனாதிபதி

262 0

அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப அரசாங்கத்தை நடத்தவோ அல்லது முப்படையினர் மீது குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்யவோ முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பலாலியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

வெளிநாட்டு நீதிபதிகளை அழைத்து இராணுவ வீரர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென கடந்த காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்த யோசனையை தான் முற்றாக நிராகரித்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினரின் பாதுகாப்பு மற்றும் கௌவரத்திற்காக தனது பதவிக்காலத்தில் பொறுப்புடன் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ரீதியாக நாட்டிற்கு எவ்வாறான சவால்கள் விடுக்கப்பட்டாலும்
இலங்கையின் சுயாதீனத்தை பாதுகாப்பதற்கு பின்நிற்கப் போவதில்லை என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.