தம்முடன் நேரடி பேச்சு வார்த்தைக்கு வருமாறு பட்டதாரிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

236 0

யாழ்ப்பாணத்தில் பட்டதாரிகள் போராட்டம் நடத்துவதற்கு பதிலாக தம்முடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை வரவேற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வடக்கு மகாண ஆளுனர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதிக்கு கூறுங்கள் என்ற நிகழ்ச்சித் திடம் தொடர்பான நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார்.

வடக்கில் பட்டதாரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் போராட்டங்களை நடத்துவதற்கு பதிலாக நேரடியாக தம்மை சந்திக்க முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தம்மை நேரடியாக சந்திப்பதற்கு முழு வாய்ப்பும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, வடக்கில் உள்ள தொழிலற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டம் இன்றும் ஆறாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகளை ஜனாதிபதி நேரடியாக சென்று சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் ஜனாதிபதி நேரில் சென்று மாணவர்களை சந்திக்காத நிலையில் மாணவர்கள் தொடர்ந்தும் போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதேவேளை, காணாமல் போனோர் உறவுகளால் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்த இரண்டு போராட்டங்களின் காரணமாக குறித்த பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை,மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து
மட்டக்களப்பு மணிக் கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக உள்ள மகாத்மா காந்தி பூங்காவில் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று 12 நாகளாக தொடர்கின்றது.

இவர்களது போராட்டத்திற்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு வழங்கியுள்ளது.

வேலை வழங்கும் வரை காந்தி பூங்காவை விட்டு வெளியேறப்போவதில்லை என போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு போரி கேப்பாப்புலவு மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்வதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.