வடக்கு, கிழக்கினை தெற்குடன் ஒப்பிடாது அபிவிருத்தி வேலைகளில் ஜனாதிபதி அதிக கவனம் செலுத்த வேண்டும்- மாவை

347 0

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கினை தெற்குடன் ஒப்பிடாது அபிவிருத்தி வேலைகளில் ஜனாதிபதி அதிக கவனம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில் இன்றையதினம் ஜனாதிபதியிடம் தெரிவிக்க செயற்றிடத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பிராந்திய அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

வடக்கு,கிழக்கு மாகாணம் என்பது நாட்டின் எனைய மாகாணங்களைப்போல் அல்லாது கடந்த 30 வருடங்களாக போரினால் பாதிக்கப்பட்டு பல வகையான அழிவுகளைச் சந்தித்த மாவட்டம் என்றும் இதன்போது சுட்டிக்காட்டினார்.