புதுக்குடியிருப்பில் 7.5 ஏக்கர் காணி முதற்தட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளது (காணொளி)

354 0

 

முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பில் 7.5 ஏக்கர் காணி முதற்தட்டமாக இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் வசமிருந்த 49 குடும்பங்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணியில் 7.5 ஏக்கர் காணி முதற்தட்டமாக இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன் ஆகியோர் இன்று குறித்த காணிகளை இரானுவத்திடமிருந்து பொறுப்பேற்று பொதுமக்கள் சென்று பார்ப்பதற்கும் குடியேறுவதற்கும் விடுவித்துள்ளனர்.

கடந்த வாரம் புதுக்குடியிருப்பில் 682 ஆவது படைப்பிரிவினால் சுவீகரிக்கப்பட்ட பொதுமக்கள் 29 பேரினுடைய 7.75 ஏக்கர் காணி இரண்டு வாரத்தில் விடுவிக்கப்படும் எனவும், மீதமுள்ள 29 பேரின் 10 ஏக்கர் காணி இராணுவ முகாமில் அமைக்கப்பட்ட கட்டடங்களை அகற்றிய பின்னர் மூன்று மாதத்திற்குள் விடுவிக்கப்படும் எனவும், பொன்னம்பலம் வைத்தியசாலைக் காணி விடுவிப்பதற்கு 6 மாத காலம் தேவைப்படுவதாகவும் இதன்படி போராட்டத்தைக் கைவிடுமாறும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கு புதுக்குடியிருப்பு மக்கள் உடன்படாத நிலையில், 7.75 ஏக்கர் காணிக்குள் தங்களை விடும் பட்சத்திலேயே, தாம் போராட்டத்தைக் கைவிடுவோம் என்று தெரிவித்திருந்த நிலையில், இன்று காணிகள் விடுவிக்கப்பட்டதையடுத்து போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன், செல்வம் அடைக்கல நாதன், முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் மற்றும் வடக்கு மாகான சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.