பாகிஸ்தான் பிரஜை விமான நிலையத்தில் கைது

258 0

போதைப் பொருளை இலங்கைக்கு கடத்திவந்த பாகிஸ்தான் பிரஜையொருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த நபர் 5 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை  கடத்தி வந்த போதே விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று காலை டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்த கட்டார் விமானத்திலேயே போதைப்பொருளை கடத்தி வந்ததாகவும் 5 கிலோ 500 கிராம் நிறையுடைய ரூபா 5 கோடிக்கும் மேல் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்துள்ளதாகவும் விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

25 வயதுடைய பாகிஸ்தான் பிரஜையே பிரவுண் சீனி வகையான போதைப்பொருளை கடத்தி வந்ததாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.