கெரவலப்பிட்டியவில் இயற்கை எரிவாயு மின்நிலையம்

325 0

LNG-terminal-1சிறீலங்காவின் மேல்மாணத்திற்குட்பட்ட கெரவலப்பிட்டியவில் 500 மெகாவாட் திறன்கொண்ட இயற்கை எரிவாயு மின் நிலையத்தை இந்தியா அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சம்பூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள அனல் மின் நிலையத்துக்குப் பதிலாக திரவ இயற்கை எரிவாயு மின் நிலையத்தை அமைக்குமாறு, இந்தியப் பிரதமரிடம் கேட்டிருந்தார்.

இதனையடுத்து அதுதொடர்பாக கலந்துரையாடும்படி இந்திய அதிகாரிகளுக்கு நரேந்திரமோடி கட்டளையிட்டிருந்தார்.

இதுதொடர்பாக இந்திய மற்றும் இலங்கை உயர்மட்டக்குழு பல்வேறு தெரிவுகள் தொடர்பாக ஆராய்ந்து இறுதியாக கெரவலப்பிட்டியவில் 500 மெகாவாட் இயற்கை எரிவாயு மின்நிலையத்தை அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது.

இங்கு, ஏற்கனவே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சியிலிருந்த வேளை 300 மெகாவாற் அனல் மின் நிலையத்தை உருவாக்கியிருந்தது.

திரவ இயற்கை எரிவாயு மின் நிலையத்தை அமைப்பதற்கு சம்பூரை விட கெரவலப்பிட்டிய மிகச் சிறந்த இடமாக கருதப்படுகிறது. மேற்கு கரையோரப்பகுதியில் அமைந்திருப்பதால், திரவ இயற்கை எரிவாயு உற்பத்தியின் முக்கிய கேந்திரமான கட்டாருக்கு இது மிக அண்மையில் உள்ளது.

குளிர்மைப்படுத்துவதற்கான கடல்நீரைப் பெறுவதற்கு வசதியாக சம்பூர் கடலோரப் பகுதியிலேயே அமைந்துள்ளது.

மேலும், அனைத்துலக சந்தையில் திரவ எரிவாயுவை மிகவும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்வதால் அனல் மின் திட்டங்களை விட, இயற்கை எரிவாயு மின் நிலையங்களை அமைப்பதற்கு செலவு குறைவாகும் என நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.