புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

95 0

புதிய பொலிஸ்மா அதிபர் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

புதிய பொலிஸ்மா அதிபர் மக்களின் நம்பிக்கையை பெறக்கூடியவராகயிருக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய பொலிஸ்மா அதிபர் பொலிஸ்சேவையில் மிகவும் முன்னுதாரணமாக செயற்பட்ட ஒருவராகயிருக்கவேண்டும் என தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவர் பொதுமக்கள் மத்தியில் பொலிஸார் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியவராகயிருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

மிகச்சிறந்தவர் நியமிக்கப்படுவது அவசியம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தசாப்தங்களாக பொலிஸ்திணைக்களத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையின்மை அதிகரித்துள்ளது எனவும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.