தலைமைச் செயலக பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்

13 0

தலைமைச் செயலக பணியாளர்களுக்காக நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் மருத்துவ முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு தலைமைச்செயலக சங்கம், அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து தலைமைச் செயலக பணியாளர்களுக்காக மருத்துவ முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது தளத்தில் நடைபெறும் இந்த முகாமை, முதல்வர்ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்து, மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டார்.

27-ம் தேதி வரை.. இந்த முழு உடல் பரிசோதனை முகாம் மார்ச் 17 முதல் 27-ம் தேதிவரை நடைபெறுகிறது. இம்முகாமில் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், இருதயபரிசோதனை, சிறுநீரகப் பரிசோதனை, ரத்தப்பரிசோதனை, இசிஜி,எக்ஸ்ரே, அல்ட்ரா சோனோகிராம்,எக்கோ போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் 5 ஆயிரம் பணியாளர்கள் பயன் பெறுவார்கள்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் ச.உமா, அப்போலோ மருத்துவமனை குழும துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி,தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.