தாயின் மரணச் சடங்கிற்காக செல்லும் சுவிஸ்குமார் தப்பிச்செல்லக்கூடும் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு சட்டத்தரணி சுகாஸ் நீதிமன்றில் கோரிக்கை

346 0

swisskumar5554வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களின் ஒருவரான சுவிஸ்குமார் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு எவ்வாறு தப்பிச் சென்றார் என்ற மர்மம் இதுவரை வெளிவராத நிலையில் தாயின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்ளச் செல்லும் அவர் மீண்டும் தப்பிச் செல்லாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என்று சட்டத்தரணி க.சுகாஸ் கோரியுள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய்க்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று மீண்டும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் முன்னிலையில் இடம்பெற்றது.
இதன் போது மன்றில் கொலை வழக்கின் சந்தேக நபர்கள் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி ரகுபதி:- இவ்வழக்கின் சந்தேக நபர்களின் ஒருவரான சுவிஸ்குமாரின் தாயார் காலமாகியுள்ளார்.
அவருடைய இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிலையில் தாயின் இறுதிக்கிரியைகளின் பங்கு கொண்டு கடமைகளை ஆற்றுவதற்கு சுவிஸ்குமார், மற்றும் அவருடைய உறவினரான 4 ஆவது சந்தேக நபருக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.
அதே போன்று இவ்வழக்கின் (வித்தியாவின் தாய் அச்சுறுத்தப்பட்டமை) சந்தேக நபரும் உயிரிளந்தவரின் சம்மந்தி எனவே அவரும் இறுதிக் கிரியைகளில் பங்கு கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கேரிக்கையினை மன்றில் முன்வைத்தார்.
இதன் போது மன்றில் வித்தியாவின் சார்பில் தோன்றியிருந்த சட்டத்தரணி க.சுகாஸ் இறுதிக் கிரியைகளில் பங்கு கொள்வதற்கான அனுமதி இவர்களுக்கு வழங்கப்படுவதில் எமக்கு ஆட்சேபனை இல்லை.
ஆனால் இக் கிரியைகளில் பங்கு கொள்வதற்காக அனுமதிக்கப்படப்போகும், சுவிஸ் குமார் என்பவருடைய மாயாயாள தந்திரங்கள் இன்னும் புரியாமலே உள்ளது. குறிப்பாக யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர் எவ்வாறு அங்கிருந்து கொழும்பிற்குத் தப்பிச் சென்று வெளிநாட்டுற்கு செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார் என்பது தொடர்பான மர்மன் இன்னும் வெளிவரவில்லை.
இறுதிக்கிரியைகளுக்காக செல்லும் அவருக்கான பாதுகாப்பினை பலப்படுத்தி மீண்டு; ஒருமுறை அவர் தப்பிச் செல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிலையில் குறித்த 3 பேரும் இறுதிக் கிரியைகளில் பங்கு கொள்வதற்கு வித்தியா தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்படாத காரணத்தினால் மூவரும் சுவிஸ் குமாரின் தாயாருடைய இறுதிக கிரியைகளில் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்புடன் சென்றுவர நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.