ரிதியகம புனர்வாழ்வு நிலையத்தை மத்திய அரசின் கீழ் கொண்டு வர அமைச்சரவை அனுமதி

156 0

சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் 1975 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள ரிதியகம புனர்வாழ்வு நிலையம் 1990 ஆம் ஆண்டு தென்மாகாண சபை சமூக அலுவல்கள் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையத்தில் சுமார் 450 பேருக்கு மாத்திரமே தங்கியிருந்து புனர்வாழ்வளிக்கக்கூடிய வசதிகள் இருப்பினும், தற்போது 576 பேர் தங்கியிருந்து புனர்வாழ்வு பெறுவதால் புனர்வாழ்வு பெறுபவர்கள் மிகவும் அழுத்தங்கள் மற்றும் சிரமங்கள் பலவற்றுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

இந்நிலைமையாலும், நாடளாவிய ரீதியில் நீதிமன்றக் கட்டளைகளுக்கமைய ஒப்படைக்கப்படுபவர்களும் இந்நிலையத்தில் தங்கியிருந்து புனர்வாழ்வு பெறுவதையும் கருத்தில் கொண்டு, குறித்த இப்புனர்வாழ்வு நிலையத்தை தென்மாகாண சபையின் நிர்வாகத்திற்குப் பதிலாக தேசிய மட்டத்திலான நிலையமாக மத்திய அரசின் கீழ் நிர்வகிப்பது மிகவும் பொருத்தமெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய ரிதியகம புனர்வாழ்வு நிலையத்தை சமூக சேவைகள் திணைக்களத்திற்கு ஒப்படைப்பதற்காக மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக  ஜனாதிபதியும்  நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.