கைதிகளின் உணவுக்காக வருடமொன்றுக்கு 7 பில்லியன் ரூபா செலவு

134 0

நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு வருடமொன்றுக்கு உணவு வழங்குவதற்காக 7 பில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறது.

மேலும், நாட்டில் உள்ள சிறைச்சாலைகளை இயக்குவதற்கு வருடமொன்றுக்கு 11 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

அதன்படி, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உணவுக்காக மாத்திரம் வருடமொன்றுக்கு 7.4 பில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறது.

மேலும், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளையும் இயக்குவதற்காக வருடமொன்றுக்கு 11 பில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறது.

இந்நிலையில் வரி செலுத்தும் மக்களின் பணத்தில் சிறைச்சாலைகளை பராமரிக்காமல், தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளை தொழில் முயற்சிகளில் ஈடுபடுத்தி அதன் மூலம் கிடைக்கப்பெறும் பணத்தை கொண்டு சிறைச்சாலை கட்டமைப்புகளை பராமரிப்பதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.