தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் யார்?

310 0

201607180728272312_Thirunavukkarasu-interview-who-is-the-new-leader-of-TN_SECVPFதமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரை மிக விரைவில் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அறிவிப்பார்கள் என காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தன்னை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கக்கூடாது என்று கூறியதாக செய்திகள் வெளியாகின.
இதில் எத்தகைய உண்மை உள்ளது? என்பது தெரியவில்லை. இளங்கோவன் தரப்பினர் இதற்கு மறுப்பு அறிக்கைக்கூட வெளியிடவில்லை.
இளங்கோவனை பலர் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோஷமிட்டபோதும் தான் அவருடன் இணைந்தே பணியாற்றினேன்.
தொடர்ந்து அவருடன் நல்லுறவில்தான் இருந்து சட்டசபை தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ததை அனைத்து தொண்டர்களும் அறிவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.