எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி ஆர்ப்பாட்ட ஊர்வலம்.Düsseldorf,Germany.

1238 0

எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி, தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி Berlin, Brewmen, Düsseldorf,Frankfurt,München ஆகிய யேர்மனியின் ஐந்து முக்கியமான நகரங்களில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலும், ஆர்ப்பாட்ட ஊர்வலமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

முக்கியமாக யேர்மனியின் மத்திய பகுதியாகிய Düsseldorf நகரத்தில் ஆர்ப்பாட்ட ஊர்வலம், Düsseldorf நகர பிரதான புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள DGB Haus க்கு முன்பாக 14.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து இவ் ஊர்வலம் Düsseldorf நகரமத்தியினூடாக மாநில நாடாளுமன்றத்தை நோக்கி நகரவுள்ளது. ஆகவே இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் அனைத்துத் தமிழீழமக்களையும் பங்குபற்றி இலங்கை அரசின் சுதந்திரதினக் கொண்டாட்டம் தமிழீழமக்களின் கரிநாள் என்பதனை உலகறியச் செய்வதற்காக உரிமையுடன் அழைக்கின்றோம்.

04 Februar.2023

14.00: மணி

Friedrich-Ebert Strasse

40210 Düsseldorf